டெலிவரிகளை எளிதாக, நம்பகத்தன்மையுடன், அணுகக்கூடியதாக செய்வதே எங்களின் மைய்ய நோக்கமாகும். அதனால்தான் நாங்கள் இந்தப் பயணத்தைத் தொடங்கினோம், அதுவே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஊக்கமளிக்கிறது. இந்த அர்ப்பணிப்பு எங்கள் நோக்கத்தை சிறப்பாக்கி அதற்கு வலிமை சேர்த்துள்ளது: ஒவ்வொரு டெலிவெரியாக 100 கோடி கனவுகளை நகர்த்துகிறோம். இதை அடைய, எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் டிரைவர்-பார்ட்னர்களை நாங்கள் மிகுந்த மரியாதையுடன் மற்றும் நியாயமான முறையில் நடத்துவதற்கு அர்ப்பணித்துள்ளோம்.
ஆதரவான மற்றும் நேர்மறையான சமூகத்தை பராமரிக்க, வாடிக்கையாளர்கள் பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்:
சமூக வழிகாட்டுதல்கள்
- பணிவாகவும் மரியாதையுடனும் இருக்கவும் — அனைவருடனும் பணிவாகவும் தொழில் ரீதியாகவும் ஈடுபடவும். முறைகேடான வார்த்தைகளைப் பயன்படுத்தக்கூடாது அல்லது மற்றவர்களுக்கு இடர்களை ஏற்படுத்துக்கூடாது.
- பாதுகாப்பான, சட்டப்பூர்வமான மற்றும் பாதுகாப்பாக பேக்கேஜ் செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே அனுப்பவும் — அனைத்துப் பொருட்களும் சட்டரீதியாக சரியாக இருக்கின்றன மற்றும் நன்கு பேக் செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தவும். ஆஃப்லைன் பயணங்கள் அல்லது நியாயமற்ற பரிவர்த்தனைகளைக் கோரவோ ஊக்குவிக்கவோ வேண்டாம்.
- திட்டமிடப்பட்ட பிக்–அப் நேரம் மற்றும் இடத்தில் தயாராக இருக்கவும் — தாமதங்களைத் தவிர்க்க சரியான நேரத்திற்கு வரவும். வாகனத்தில் பொருந்தாத பெரிய அளவிலானபொருட்களை ஏற்றக் கூடாது அல்லது வாகனத்தின் திறனை மீறி அதிக சுமைகளை ஏற்றக் கூடாது.
- உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வாகன வகையைத் தேர்வு செய்யவும் — உங்கள் டெலிவரிக்கு பொருத்தமான வாகன வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- செயலியில் காட்டப்படும் முழு கட்டணத்தையும் செலுத்தவும் — செயலியில் காட்டப்பட்டுள்ள தொகையுடன் பேமெண்ட்டுகள் பொருந்துவதை உறுதிசெய்யவும். ஆர்டர்களை ரத்து செய்து, பார்ட்னரை தவறாகக் குற்றம் சாட்டக்கூடாது.
- அனைவரையும் மதிக்கவும் – எந்தவொரு பாரபட்சம் அல்லது பாகுபாடுகள் இல்லாமல் நடப்பதை உறுதிப்படுத்தவும். பாலினம், மதம், சாதி அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது.
இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், மிக உயர்ந்த தரத்தை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மரியாதைக்குரிய மற்றும் திறமையான சமூகத்தை நாங்கள் உருவாக்குகிறோம். போர்ட்டர் சமூகத்தின் ஒரு மதிப்புமிக்க உறுப்பினராக இருப்பதற்கு நன்றி.